Wealthy Tamilan’s love quotes in tamil
“Inspiring Heartfelt Love Quotes in Tamil That Will Melt Your Heart” is a collection of the most affecting love quotes in Tamil that express the highest levels of affection, emotion, and loyalty. These quotes are perfect for anybody looking to express their feelings to a special someone or simply absorb the beauty of love. WealthyTamilan gives carefully picked love quotes in Tamil that are likely to touch your heart and motivate you to express your emotions most lyrically. Read these quotes and let them speak the language of love to you.”
உன்னோடு மட்டும் பொருந்திப் போகிறது என் கவிதைகள்.
உன்னை நினைக்க வேண்டாம் என்று என் மனம் சொல்கிறது.. ஆனால் அந்த மனது தான் எப்போதும் உன்னை பற்றி நினைத்து கொண்டு இருக்கிறது.
உனது இதயத்தில் எனக்கான இடத்தை யாரையோ வைத்து நிரப்பியவனாய் நீ..!! ஆனால் உன்னுடைய இடத்தை யாரையும் நிரப்ப விடாதவளாய் நான்.
ஒரு இதயத்தை உண்மையாக நேசித்து பார்.. ஆயிரம் இதயங்கள் உன் அருகில் இருந்தாலும் உன் கண்கள் நீ நேசிக்கும் இதயத்தை மட்டும் தேடும்.
பெய்து விட்டதாய் சொல்லப்படும் மழை மீண்டும் மீண்டும் வேண்டப்படுகிறது.. என்னில் பொழியும் உன் நினைவுகளை போல.
என் தேடலில் கிடைத்த மிகச் சிறந்த பொக்கிஷம் உன் நினைவு.
தாகம் கொண்ட என் இதயத்தில் விழுந்த ஒற்றை மழைத்துளி நீ.
பூவின் மீது விழுந்த மழைத்துளி மேலும் அழகானது போல், என்மீது விழுந்த உன் அன்பும் ஒவ்வொரு நொடியும் பேரழகாய் தெரிகிறது.
கண்கள் திறக்கும் வரை தான் கனவு நீடிக்கும்.. ஆனால் என் கண்கள் மூடும் வரை உன் நினைவு நீடிக்கும்.
பெண்களின் காதல் பூவிலுள்ள பனித்துளி போல அழகானது. ஆண்களின் காதல் வேரில் உள்ள நீரைப்போல ஆழமானது.
பொய்யாக நேசிப்பவர்கள் கூட சந்தோஷமாக இருக்கின்றனர். உண்மையாக நேசிப்பவர்கள் தான் அதிகம் காயப்படுகின்றனர்.
விலகி போனாய் நெருங்கி வந்தேன்.. வெறுத்து போனாய் விரட்டி வந்தேன்.. இனி நிச்சயம் வற்புறுத்த மாட்டேன்.. உன்னை மட்டும் அல்ல உன் நிழலையும்.
நீயாகத் தேடி வந்து தந்த காதல், இன்று நானாகத் தேடியும் கிடைக்காமல் போனது ஏன்.
உன் மௌனத்தில் உள்ள வார்த்தைகளையும் உன் கோபத்தில் உள்ள அன்பையும் யாரால் உணர முடிகிறதோ அவர்கள் தான் உனக்காக படைக்கப்பட்டவர்கள்.
காலம் சென்றாலும், கனவுகள் மறைந்தாலும், கவிதைகள் அழிந்தாலும், என் உயிர் பிரிந்தாலும், காற்றோடு தொடர்ந்து வருவேன், உன் அன்புக்காக.
உலகை நேசிக்காமல் உன்னை மட்டும் நேசித்தேனடா அன்று.. நீயும் நேசிக்காததால் உலகமே என்னை வெறுப்பதுபோல் தோன்றுகிறதடா இன்று.
இனங்கள் மாறுகின்ற தருணம்.. இனம் புரியா ஓர் உணர்வு காதல்.
“SHE IS MY WIFE” என்று சொல்வதைவிட, “SHE IS MY LIFE” என்று சொல்லிப்பாருங்கள்.. வாழ்க்கை அர்த்தமுள்ளதாக மாறிவிடும்.
கண்ட பெண்களை மஞ்சத்தில் வீழ்த்துவது அல்ல ஆண்மை.. கொண்ட பெண்ணின் நெஞ்சத்தில் வீற்றிருப்பது தான் உண்மையான ஆண்மை.
நேற்று நானாக.. இன்று நீயாக.. நாளை நாமாக வாழ ஆசை.
உறவுகளை உடைத்து, உணர்வுகளை தகர்த்து, உடமைகளை தொலைத்து, உண்மைகளை மறுத்து, உலகை மறந்து, உயிர்மட்டும் விழித்திருப்பதுதான் காதல்.
நீ தேடும் ஒருவர் உன் தேடலில் கிடைப்பதில்லை. உன்னை தேடும் ஒருவரை நீ திரும்பிக்கூட பார்ப்பதில்லை.
நான் இல்லாத தனிமைகள் ஒருபோதும் உன்னை தாக்கவில்லை என்றால் நான் உன் நினைவுகளில் இல்லையென்று ஒப்புக்கொள்கிறேன்.
கண்கள் செய்த சிறிய தவறுக்காக இதயம் அனுபவிக்கும் ஆயுள் தண்டனை – காதல்.
அன்பு என்பது வெறும் வார்த்தைதான்.. யாரும் வந்து அர்த்தம் தரும் வரை.
யார் சொன்னது? பெண் மட்டும் தான் உயிரை சுமப்பாள் என்று… ஒவ்வொரு ஆணின் இதயத்தை தொட்டு பாருங்கள்.. அதில் ஒரு பெண் நினைவு உயிராக இருக்கும்.
கவிதைகளை தந்த என் காதல், கனவுகளை தந்த என் காதல், ஏனோ எனக்கு வாழ்க்கையை தர மறுத்து விட்டது.
உள்ளத்தில் வந்தவருக்கு உட்கார இடம் கொடுத்தேன்.. உனக்கு மட்டும் தான் உள்ளத்தையே கொடுத்தேன்.
கண்களால் பார்க்க மட்டுமே முடியும் என எண்ணியிருந்தேன்.. ஈர்க்கவும் முடியும் என்பதை உன் கண்களைக் கண்ட பின்பு தான் கண்டு கொண்டேன்.
காயப்பட்ட இதயத்திற்கு ஒரே ஆறுதல் காயப்படுத்திய நீ மட்டுமே.
என்றோ தொலைத்த உன்னை இன்று அருகாமையில் தேடுகிறது என் இதயம்.
Love Quotes in Tamil
மழையில் நான் நனையாமல் இருக்க, குடை விரித்தாய்.. நனையத்தொடங்கியது என் இதயம்.
தேடி தேடி சென்றால், தேவதையாய் தெரிவாள்.. தேடி தேடி வந்தால், தேவையற்றவலாய் தெரிவாள்.. ஆணுக்கு பெண்.
நீ என்னை நேசிக்கவே யோசிக்கிறாய்.. நான் உன்னை நேசித்து நேசித்து சுவாசிக்கிறேன்.
உன்னிடம் சண்டை போடும் இதயத்தை விட்டு விடாதே… அவர்களை விட உன்னை வேறு யாரும் உண்மையாக நேசிக்க முடியாது
யாருடைய மனதில் காதல் இல்லையோ அது இதயம் இல்லை, கருங்கல்! யாருடைய இதயம் கருங்கல் ஆகியதோ அதற்கு காரணம் காதல்.
நீ என் மீது கோபமாக இருந்தாலும் எனக்கு இன்பமே.. ஏனென்றால் சந்தோஷத்தில் இருப்பதை விட கோபத்தில் நீ என்னை அதிகமாக நினைப்பாய்.
உனக்கென இத்தனை கவிதைகள் நான் எழுத.. யாரிடமோ கெஞ்சி நிற்கிறாய் ஒரு கவிதைக்காக.
உன்னை பார்த்துக்கொண்டேயிருக்கும் அற்புத நிமிடங்களில், அனைத்தும் மறந்து ஊமையாகிவிடுகிறது என் உலகம்.
நீ மறந்துபோன ஞாபகம் நான்.
சுவாசிக்க சுவாசம் இல்லாவிட்டாலும் நேசிக்க உன் நினைவுகள் இருந்தால் போதும் நான் உயிர் வாழ.
காதலியை மனைவியாக்க துணிவு தேவை..! மனைவியை காதலியாக்க கனிவு தேவை.
நான் இறக்கும் நிலை வந்தாலும் உன்னை மறக்கும் நிலை வராது.
நீ என்னருகில் இல்லை என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை நீ எனக்குள் இருக்கின்றாய் என்பது.
காரணம் இல்லாமல் யார் மீதும் காதல் வருவதில்லை.. ஆனால் அந்த காரணம் தான் யாருக்கும் புரிவதில்லை.
அலை கடலும் உன் அன்பும் ஒன்றுதான்.. இரண்டும் ஓய்வதே இல்லை.
துடிக்காத என் இதயத்தை துடிக்க வைத்தவனே.. உயிரில்லா என் உடலுக்கு காதல் உயிர் கொடுத்தவனே.. உன் மீது கொண்ட காதலை ஜென்மத்திற்கும் அழிக்க முடியாது.
உடன்படாத இதயம் ஒன்றால் உடைபடுகிறது மற்றொரு இதயம்.
நீ உதிர்க்கும் சொற்களுக்கு மயங்காவிடினும் உன் உதடுகளின் அசைவிற்கு நான் மயங்கி தான் ஆக வேண்டும்.
Love Quotes in Tamil
உன் விழிகள் பேசும் மொழியின் அர்த்தம் புரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறேன் நான்.. அதற்கான அகராதியையும் நீயே எழுதிவிடு உன் கரு விழிகளால்.
உன் அழகை ஆராதிக்கக் கடமை பட்டவனாய் நானும்.. உன் அழகால் என்னை அணுஅணுவாய் கொலை செய்யும் கொலைகாரியாய் நீனும்.
என்னை பார்க்கும் போதெல்லாம் பொய்க்கோபம் கொள்கிறாய்.. எனக்குத் தெரியும் அது கோபமில்லை வெட்கம் என்று.
கண்ணீரும் இனிக்கும்.. காத்திருப்பும் பிடிக்கும்.. தோழி நீ அருகில் இருக்கும் பொழுதுகளில்.
ஒரு பெண் சிரிக்கும்போது, அழகாக இருப்பாள்.. அவளை சிரிக்க வைத்து ரசிக்கும் ஒரு ஆண் அதை விட அழகாக தெரிவான்.
வெறுத்து போகிறவரை விரட்டிப் பிடிப்பது தவறு… என்று அறிவுக்கு தெரிந்தாலும் இதயத்திற்கு தெரிவதில்லை.
எந்த ஒரு பெண்ணையும் முழுமையாக புரிந்துகொள்ள முயற்சிக்காதே.. முடிவில் அந்த பெண்ணை காதலிக்க ஆரம்பித்து விடுவாய்.. அல்லது பைத்தியமாகி விடுவாய்.
கிடைக்கும் பொழுது பெற தவறினால், தேடும் பொழுது கிடைக்காது..!! – “அன்பு”
உண்மையான அன்பை புரிந்து கொள்ளும் ஒரு அழகான சந்தர்ப்பம் தான் பிரிவு.
அழுகையை நிறுத்தி சிரிக்க வைக்க முடியுமென்றால், அது உண்மையாய் நேசிப்பவர்களால் மட்டுமே சாத்தியமாகும்.
எந்த ஒரு பெண்ணால் ஒரு ஆணின் கடந்த காலத்தை மறக்க வைக்க முடிகிறதோ அவள் தான் அந்த ஆணின் மொத்த எதிர்காலமுமாக ஆகிறாள்.
உண்மையான அன்புக்கு பிரிவு என்பது ஒரு தொடக்கம் தான்.
பிரிந்த காதல் சேராவிட்டாலும் பதிந்த நினைவுகள் ஒருபோதும் இதயத்தில் இருந்து அழிவதில்லை.
தவறு என்று தெரிந்தும் தவிர்க்க முடியாமல் தவிக்கும் இதயத்தின் ஆசைதான் காதல்.
எப்போதும் நினைவுக்கு வருவதால் மறக்க நினைக்கிறேன்.. மறக்க நினைப்பதால் எப்போதும் நினைவில் இருக்கிறாய்.
உன் இதழ்களை போல் உன் கண்களுக்கும் பொய் சொல்ல கற்றுக்கொடு… உன் காதலை காட்டிக்கொடுக்கிறது.
உன்னை பார்த்த அந்த முதல் நொடியும், உன்னை விட்டுப் பிரிந்த அந்த கடைசி நிமிடமும் ஒட்டிக்கொண்டது என் நினைவில்.
நீயும் நானும் ஒன்றாய் போகும் போது நீளும் பாதை இன்னும் நீள நெஞ்சம் ஏங்குதடி.
நதியில் விழுந்த இலையும் காதலில் விழுந்த மனமும் ஒன்றுதான்.. இரண்டுமே கரைசேரும் வரை தத்தளித்துக் கொண்டே இருக்கும்.
என் நினைவுகளை தொலைத்து விட்டு நீ வாழ முடியும் என்றால் என் அன்பு தோற்று விட்டது என்று ஒப்புக் கொள்கிறேன்
உன்னை எப்போதும் இதயத்துக்கு ஒப்பிட மாட்டேன்.. ஏனென்றால், நீ துடிப்பதை என்னால் தாங்க முடியாது.
என்னை பார்க்காமல் பூக்கும் பூக்கள் ஆயிரம் உண்டு.. ஆனால் என்னை பார்த்தவுடன் பூக்கும் பூக்கள் உன்னிடம் மட்டுமே உண்டு.
நான் வார்த்தை தேடி அலைந்த போது, வந்து கிடைத்த கவிதை நீ.
காதல் ஒரு அழகான உயிர்.. பலரிடம் வந்தாலும் சிலரிடமே வாழ ஆசைப்படுகிறது.
அழ வைப்பது நீ என்று தெரிந்தும் அடம் பிடிக்கிறது என் கண்கள் உன்னை தான் காண வேண்டும் என்று.
தோழி..! நீ எழுதிய காதல் கடிதங்களாக உன் காலடித் தடங்கள் என் நினைவுகளில் நிறைகின்றன.
காதலைப்போல் மிகச் சிறந்த பரிசும் இல்லை.. மிக மோசமான தண்டனையும் இல்லை.
ஆசைக்காக காதலித்து இருந்தால் எவளோ ஒருத்தி என்று விட்டுருப்பேன்.. வாழ்க்கைக்காக காதலித்தேன், அதனால் தான் இன்னமும் வலிக்கிறது என் இதயம்.
Love Quotes in Tamil
விரும்பியபோது விரும்பினேன் என்பதை விட, வெறுத்த போதும் விரும்பினேன் என்பதே உண்மை.
அதிகம் கோபம் கொண்டதும், அதை விட அதிகமாய் பாசம் கொண்டதும் உன்னிடம் மட்டுமே
உன் அன்பை பத்திரமாக என் இதயத்தில் வைத்திருந்தேன்.. பின்புதான் தெரிந்து கொண்டேன் உன் அன்புதான் என் இதயத்தை பத்திரமாக வைத்திருக்கிறது என்று.
எந்த இடத்தில் அன்பு முன் வைக்கப்படுகிறதோ அந்த இடத்தில் அழகு பின் நோக்கி தள்ளப்படுகிறது.. அது தான் உண்மையான காதல்.
உன் காதலை தயக்கமின்றி சொல்லிவிடு.. இதயங்கள் உடைவதற்கான முதல் காரணம் காதலை சொல்லாது தான்.
ஒரு வார்த்தையில் உயிர் விடுவதும், ஒரு வார்த்தைக்காக உயிர் விடுவதும் உண்மையான காதலினால் மட்டுமே நடக்கும்.
கண்களை திறந்து கொண்டே கனவுகள் காண்கிறேன் உன்னை பார்த்த நாள் முதல்… உதடுகள் ஆயிரம் பெயர்களை உச்சரித்த போதிலும் என் உள்ளம் உச்சரித்த ஒரே பெயர் உன் பெயர் மட்டும் தான்.
என்னை பிரிந்தாலும் மறந்தாலும் காதல் என்பதை நீ நினைக்கும் ஒவ்வொரு கணமும் என்றும் உன்னிடம் இருப்பேன்.. நீ மறந்து போன அதே காதலனாக.
எனக்கு பிடித்த மிகச்சிறிய கவிதை உன்னுடைய “ம்”.. எனக்கு பிடித்த மிகப்பெரிய காவிதி உன்னுடைய “உம்ஹும்”
பலத்தை பலவீனம் அடக்கி ஆளும் வினோதம் தான் காதல்.
அவள் புதையல் நிரம்பிய விழிகளுக்காக இமைகள் நடத்தும் முற்றுகைப்போர்… கண் சிமிட்டல்.
என்னிலடங்கும் என் இதயத்துடிப்பில் ஏனோ எண்ணிலடங்காத உன் நியாபகங்கள் மட்டும்.
இந்த நொடி நீ என்ன செய்து கொண்டிருப்பாய் என்ற நினைவிலேயே கழிகிறது என் அருமை நிமிடங்கள்.
அவள் என்னை வெறுத்த பின்னும் நான் அவளை நேசிக்கிறேன்.. ஏனென்றால், அவளின் தாயை விட அவளை அதிக நாள் சுமந்தவன் நான்.
நீ பிரிந்த மறு நிமிடமே உணர்ந்தேன்.. பிரிவு.. மரணத்தின் ஒத்திகை என்று.
காற்றடிக்கும் போது கூட கண்களை மூடி கொள்கிறேன்.. என் கண்களுக்குள் இருக்கும் நீ கலங்கி விட கூடாதென்று.
ஒரு பெண் அழகாக இருப்பதால் அவளை நீ நேசிக்கவில்லை.. நீ நேசிப்பதால்தான் அவள் அழகாக தெரிகிறாள்.
காற்றோடு கலந்துவிட்ட பூக்களின் வாசமும், என்னோடு கலந்துவிட்ட உனது அன்பின் நேசமும் என்றுமே பிரியாது.
ஒரு உயிரை நீ நேசிப்பது நிஜம் என்றால் அதை பறவை போல் பறக்க விடு.. அது உன்னை நேசிப்பது நிஜம் என்றால் மீண்டும் உன்னை தேடி வரும்.
மறந்து விடு மனசே.. அவனை மறக்க வேண்டும் என்று நினைப்பதை.
ஒவ்வொரு ஆணின் இதயமும் ஒரு ஆலமர விழுது போல.. யாரோ ஒருத்தி ஊஞ்சல் ஆடி போயிருப்பா.
கல் தடுக்கி விழுந்ததில்லை,உன் கண் தடுக்கி விழுந்துவிட்டேன்… காதலில்.
காதலிக்க தெரிந்த போது காத்திருக்க தெரியவில்லை.. காத்திருக்க தெரிந்த போது காதல் அருகில் இல்லை.
காதலுக்கு காதில்லை.. ஆம்… நீ உன் காதலை சொல்லி புரிய வைக்க முடியாது.. உன் அன்பை காட்டி தான் புரிய வைக்க முடியும்.
வலி தந்தவரை உயிராய் நினைப்பது தாய்மையும் காதலுமே.
எத்தனை தடவை யோசித்தாலும் ஞாபகத்திற்கு வர மறுக்கிறது உன் மேல் காதல் வந்த அந்த அழகான நொடி.
Love Quotes in Tamil
உன்னுடைய மிக சிறந்த ‘Hello’ ஆகவும், மிக கடினமான ‘Goodbye’ ஆகவும் இருக்க ஆசைபடுகிறேன்.
நீ பேச மறுத்த நிமிடங்களில் கூட பேசிக்கொண்டு தான் உள்ளது நம் காதல் உன் ஒரு விழி பார்வையின் மூலம்.
உயிருக்கு மேலாக உன்னை காதலிக்க தெரிந்தும் அந்த காதலை இறுதி வரை உன்னிடம் தெரியபடுத்த முடியாமல் நான் தவிக்கும் தவிப்பு யாருக்கு புரியுமடா.
உலகில் ரசிக்க ஆயிரம் இருந்தும்.. அனைத்தையும் மறந்து நான் ரசித்தது.. உன்னோடு பேசிய இனிமையான நாட்களை மட்டுமே!
பத்து மாதம் சுமக்கவில்லை.. ஆனால் உன்னிடத்தில் பார்கிறேன் தாயின் மரு உருவம்.
காதலில் காத்திருப்பது மட்டும் சுகமில்லை.. பிரியும் ஒவ்வொரு நொடியும் சுகமான நினைவுகள் தான்!
அன்பானவர்களே.. தயவு செய்து என் பெயரில் யாரையும் ஏமாற்றாதீர்கள்.
உன்னை இந்த நிமிடம் நினைப்பவர்கள் எத்தனை பேர் என்று எனக்கு தெரியாது.. ஆனால் இந்த நிமிடம் உன்னை நினைப்பவர்களில் நானும் ஒருவன்.
விழிகள் இமைக்க மறந்த நொடிகளில் கூட நான் உன்னை நினைக்க மறக்கவில்லை.. நீ தொலை தூரத்தில் அல்ல விழி ஓரத்தில் இருப்பதனால்.
ஒவ்வொரு முறையும் உன்னை நினைக்கும் போது ஒவ்வொரு நட்சத்திரத்தை படைக்க சொன்னேன்.. வெளியே வந்து பார் உன்னை எவ்வளவு நினைக்கிறேன் என்று.
உன் இதயத்தை ஒருவர் சுக்குநூறாக உடைத்த பிறகும், உடைந்த துண்டுகளை வைத்து மீண்டும் நேசிப்பதற்கு பெயர் தான் காதல்.
நிலவையும் விண்ணையும் பிரிப்பது அமாவசை. என்னையும் அவளையும் பிரிப்பது அவள் அம்மா ஆசை.
அருகம்புல் போல என் காதல் வளர்ந்து கொண்டிருக்கும்போது, அவள் அப்பன் எருமை மாடு போல மேய்ந்து விட்டான்.
நாம் நண்பர்கள் ஆகிவிட்டோம் என்று சந்தோஷப்படுவதா.. இல்லை கடைசி வரை நண்பர்களாகவே இருப்போம் என்று வருத்த படுவதா என்று தெரியவில்லை.
எப்படா இவ பேசுவா என்பதுற்கும் எப்படா இவ பேச்ச நிறுத்துவ என்பதுற்கும் இடைப்பட்ட காலம் தான் “காதல்”
உன்னை எப்பொழுதும் நினைத்து கொண்டிருப்பதாலேயே நான் என்னையே சில சமயங்களில் மறந்து விடுகிறேன்.
அர்த்தமில்லா வாழ்க்கையில் ஆயிரம் அர்த்தங்களை அரைநொடி பார்வையில் தந்தது காதல்.
Love Quotes in Tamil
எனக்கு தினமும் பிறந்த நாள் தான் ஒவ்வொரு நாளும் உன் கன்னக்குழியில் இறந்து போவதால்.
நீ நேசித்த இதயத்தை ஏமாற்றி விடாதே பின்பு நீயே தேடிச்சென்று நேசித்தாலும் அது உன்னை நேசிக்காது.
எத்தனையோ உறவுகளை பிரிந்த போதெல்லாம் கலங்கிடாத கண்கள் இன்று உன் பிரிவால் கலங்கி நிற்கிறது.
காதல் என்பது வலி தான்.. இதயங்கள் இரண்டையும் ஒன்றாக தைப்பதினால்.
இதயத்தை காய படுத்துகிறாய் அதில் இருப்பது நீ என்று தெரியாமல்.
நீ தொட்டுச்சென்ற வெட்கத்திலும் விட்டுசென்ற மிச்சதிலும் சிக்கி தவிக்கிறேன் நான்.
காதல் என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாமல் காதலித்து விட்டு அதை புரிந்து கொள்ள நினைக்கையில் தான் வாழ்வில் மரண வலிகளை உணர்கிறோம்.
உன் இதயம் ஒரு சிறையானால், நான் அதில் ஆயுள் தண்டனை கைதி ஆக விரும்புகிறேன்!
நீ காதலிப்பவள் அழகாக இருப்பதை விட உன் வாழ்கையை அழகாகக்குபலாக இருக்க வேண்டும்
நீ என்னை விட்டு செல்வதை நான் வெறுத்தாலும், ‘சென்று விடு’ என்றே மனம் சொல்கிறது.