Wealthy Tamilan’s Inspirational Quotes in Tamil
Tamil is a rich language that offers knowledge and meaningful sentiments to motivate and inspire. WealthyTamilan provides some of the most powerful inspirational quotes in Tamil that can help you achieve success. These quotes are not just words; they convey timeless truths that inspire you to overcome challenges, stay focused on your goals, and keep moving forward no matter what obstacles you face. Let these inspirational quotes in Tamil guide you on a journey of strength, determination, and future success.
நேரத்தைத் தள்ளிப் போடதே. தாமதித்தால் அபாயமான முடிவு ஏற்படும்.
இலக்கியம் என்பது சிறந்த நினைவுகளின் பதிவாகும்.
மற்றவர்களை எடைபோடுவதில் காலத்தை வீணாக்காதீர்கள். ஏனெனில் அவர்களை நேசிப்பதற்கு உங்களுக்கு நேரமில்லாமல் போய்விடும்.
உங்களால் பெரிய விஷயங்களைச் செய்யமுடியவில்லை என்றால், சிறிய விஷயங்களைச் சிறந்த வழியில் செய்து பாருங்கள்.
குழந்தைகளுக்குக் கல்வி புகட்டுவோர் பெற்றோர்களையும் விட பெருமதிப்புக்கு உரியவர்கள்.
எடுத்த முயற்சியைக் கைவிடும்பொழுது, நாம் வெற்றிக்கு மிக அருகில் இருக்கிறோம் என்பதை உணராதவர்களே தோல்வியடைகிறார்கள்.
பணத்தைத் தவறான வழியில் இழப்பது குற்றம். தவறான வழியில் தேடுவது அதைவிட பெரிய குற்றம்.
குணத்தில் மிக உயர்ந்தவனும், குணத்தில் அடிமட்டத்தில் இருப்பவனும் ஒருபோதும் மாறவே மாட்டார்கள்.
உங்கள் நம்பிக்கையை வைத்து முழுமையாக வாழுங்கள். உலகத்தையே உங்களால் புரட்டிப்போட முடியும்.
மனோ தைரியத்தை இழந்துவிட்டால் மனிதன் எல்லாவற்றையும் இழந்தவனாகிறான்.
மனதில் ஒன்றைத் திட்டமிட்டு, அது நடக்கும், கிடைக்கும் என்று திடமாக நம்பினால் மனித மனம் எப்பாடுபட்டாவது அதை பெற்றுத் தந்துவிடும்.
ஒரு மனிதன் செய்யக்கூடிய செயல்கள் அனைத்திலும் மிகச் சிறந்தது தனக்குத்தானே முற்றிலும் நல்லவனாக இருப்பதுதான்.
பணமும் ஆடம்பரமும் முக்கியமானதல்ல. அதைப் பயன்படுத்தும் விதமே முக்கியமானது.
உயர்ந்த பண்பாடு என்ற சிறைக்குள் அடைப்பட்டு நேர்மை, ஒழுக்கம் என்னும் சட்டதிட்டங்களை நமக்கு நாமே எற்படுத்திக்கொள்ள வேண்டும். அப்போதுதான் மனிதர்கள் என்று சொல்லிக்கொள்வதில் அர்த்தம் இருக்கும்.
சிறு சிறு விஷயங்களில் பொறுமை காட்டாவிடில், பெரிய காரியங்கள் கெட்டுப் போகின்றன.
வலிமை உடலிலிருந்து வருவதில்லை. அசைக்க முடியாத மனவுறுதியிலிருந்து வருகிறது. நமது மனதின் தூய்மை அதிகமாக இருந்தால், நமது வலிமையும் அதிகமாக இருக்கும். நாம் தேடும் வெற்றி இன்னும் வேகமாக கிடைக்கும்.
மாற்றம் இல்லாமல் முன்னேற்றம் சாத்தியமற்றது. எண்ணங்களை மாற்றிக்கொள்ள முடியாதவர்களால் வேறு எதையும் மாற்ற முடியாது.
உண்மை என்பது பூட்டி வைக்கப்படும் பொக்கிஷகம் அல்ல. அது உரிமைப் போராட்டத்தின் வெற்றிக்கொடி! அது பலமுறைகள் கிழிக்கப்படலாம். ஆனால் அதற்கு மரணம் இல்லை.
எல்லோராலும் மதிக்கப்படும் புத்தகம் பெரும்பாலானோரால் படிக்கப்படுவதில்லை.
ஆண்டவன் சோதிப்பது எல்லோரையும் அல்ல.. உன்னைப் போல சாதிக்காத துடிக்கும் புத்திசாலிகளை மட்டுமே.
எவர் பேசுவதையும் கேட்டுக்கொள்; ஆனால் சிலரிடமே பேச்சு கொடு. எவர் கஷ்டத்தையும் தெரிந்து கொள்; ஆனால் உன் கருத்தைக் கூறிவிடாதே.
இதயம் என்பது அறிவைவிட உயர்ந்தது. இதயத்தைப் பண்படுத்தி வளர்ப்பதிலேயே கவனம் செலுத்துங்கள்.
சிரிப்பின் மொழி மறந்தவன் வாழ்வையே தொலைத்தவன்.
என்னிடம் எதை வேண்டுமானாலும் கேள்.. ஆனால், நேரத்தை மட்டும் கேட்காதே.
நாடு உங்களுக்கு என்ன செய்தது என்று கேட்பதைவிட, உங்களால் நாட்டுக்கு என்ன செய்ய முடியும் என்று கேட்டுப்பார்க்க வேண்டும்.
விடியாத இரவென்று எதுவும் இல்லை. முடியாத துயரென்று எதுவும் இல்லை. வடியாத வெள்ளம் என்று எதுவும் இல்லை. வாழாத வாழ்க்கை என்று எதுவும் இல்லை.
உண்ணக் கனி, ஒதுங்க நிழல், உடலுக்கு மருந்து, உணர்வுக்கு விருந்து, அடையக் குடில், அழகு வேலி, ஆடத் துளி, தடவத் தைலம், தாளிக்க எண்ணெய், எழுதக் காகிதம், எரிக்க விறகு.. மரம்தான் மரம்தான் எல்லாம் மரம்தான்.. மறந்தான் மறந்தான் மனிதன் மறந்தான்.
அழகைப் பற்றி கனவு காணாதீர்கள், அது உங்கள் கடமையை பாழாக்கி விடும். கடமையைப் பற்றி கனவு காணுங்கள், அது உங்கள் வாழ்க்கையை அழகாக்கும்.
நீ ஓழுக்கம் உள்ளவனாக இருந்தால் கவலையே வராது. நீ அறிவாளியாக இருந்தால் குழப்பம் வராது. நீ துணிவுள்ளவனாக இருந்தால் அச்சம் வராது.
எத்தனை வள்ளல்கள் வாழ்ந்தும் வறுமையை ஒழிக்க முடியவில்லை. ஒரு நல்ல அரசாங்கம் ஏற்பட்டால் வள்ளல்களே தேவையில்லை.
நோயால் மரணமடைபவர்களை விட அச்சத்தால் மரணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகம்.
பொறுமை மற்றும் நேர்மை ஆகியவை மிகவும் சக்தி வாய்ந்த வீரர்களுக்கு இணையானது.
நாம் எதைப் பெற்றிருக்கிறோம் என்பது முக்கியமல்ல. பெற்றிருப்பதை எப்படி அனுபவிக்கிறோம் என்பதுதான் முக்கியம்.
ஒரு சிறிய அன்பை குழந்தைகளிடம் செலுத்திப் பாருங்கள், அதற்கான பெரிய பலனை அவர்களிடமிருந்து திரும்பப் பெறுவீர்கள்.
உங்களுக்கான மிகப்பெரிய வாய்ப்பானது, நீங்கள் தற்பொழுது இருக்கும் இடத்திலேயேகூட இருக்கலாம்.
அவனவனுக்கு உரித்தானதை அவனவனுக்கு வழங்குவதுதான் நீதி.
நாம் காட்டும் பணிவிற்கும் மரியாதைக்கும் பதிலாக ஏதேனும் ஒரு நன்மையைப் பெற வேண்டும் என்று எதிர்பார்ப்போமேயானால் நம்மிடம் உண்மையான அன்பு உருவாகாது.
உங்கள் கௌரவம் உங்கள் நாக்கின் நுனியில்தான் இருக்கிறது.
பலிபீடத்தில் வெட்டப்படுபவை ஆடுகள்தான் சிங்கங்களல்ல. சிங்கங்களாக இருங்கள்.
உங்கள் குறைகளை நீங்களே அடையாளம் கண்டு கொள்வது தான் வளர்ச்சியின் அடையாளம்.
நீ யாருக்கும் பக்கத்திலிருக்காதே, தூரத்திலேயே இரு.. பக்கத்தில் இருக்கும் இமையைப் பார்க்க முடியாத கண்கள், தூரத்தில் இருக்கும் நட்சத்திரத்தைப் பார்த்து விடுகின்றன.
அறிவை விட கற்பனை முக்கியமானது. அது நம்மை உறுதியாக நம்ப வைத்து, இருபது மடங்கு ஆற்றலுடன் இலட்சியத்தை நோக்கி செயல்ப்படும் வீரராக உருவாக்கிவிடும் சக்தி படைத்தது.
சமாதானமே சிறந்த மற்றும் மலிவான வழக்கறிஞர்.
ஒரு மென்மையான வார்த்தை, ஒரு கனிவான பார்வை, ஒரு அன்பான புன்னகை ஆகியவற்றால் அதிசயங்களையும், அற்புதங்களையும் நிகழ்த்திக் காட்ட முடியும்.
நம்முடைய முக்கியக் குறைபாடு என்னவென்றால், நாம் காரியங்களைச் செய்வதற்குப் பதிலாக அவற்றைப் பற்றி பேசிக்கொண்டே இருப்பதுதான்.
அச்சம், வெகுளி போன்ற உணர்வுகளை நாம் தக்க இடத்தில், தக்க அளவில், தக்க முறையில் வெளிப்படுத்த வேண்டும். உணர்வுகளை ஆளக் கற்றுக்கொள்வது தான் ஒருவருடைய கல்வியின் சிறப்பான பகுதி.
நேற்றும் இன்றும் கதையாகக் கழிந்துவிட்டன.. நாளை உதயமாவதை எதிர்பார்த்திருங்கள்.
யார் அதிகமாக கேள்வி கேட்கிறார்களோ, அவர்களே அதிகமாக கற்றுக்கொள்ளவும், தக்கவைத்துக் கொள்ளவும் செய்கிறார்கள்.
நம்முடைய மரணத்தைப்பற்றி நாம் மறந்திருக்கும் வரை, அது ஒருபோதும் நமக்கானது அல்ல.
செபமாலையை உருட்டிக்கொண்டு மூலையில் உட்கார்ந்திருக்காதே. நீ விரும்பும் கடவுள் இங்கேயில்லை. அதோ புழுதிப்படிய வியர்வை வடிய நிலத்தை உழுது பாடுபடுகிறானே விவசாயி.. அவனிடம் இருக்கிறார்.
Inspirational Quotes in Tamil
கேட்கும்போது சிரிப்பு வரவேண்டும். சிந்தித்துப் பார்த்தால் அழுகை வரவேண்டும். அதுதான் நல்ல நகைச்சுவை.
ஒவ்வொரு நாளும் ஆண்டின் மிகச்சிறந்த நாள் என்று உன் இதயத்தின் மீது அழுத்தமாக எழுதிக்கொள். ஒவ்வொரு நாளையும் உன்னால் மாற்றிக் காட்ட முடியும் மனதில் உறுதியிருந்தால்.
தனக்குத் தெரிந்ததை தெரியும் என்றும், தெரியாததை தெரியாது என்றும் அறிவதுதான் அறிவு.
யார் தன்னுடைய நாவைச் சிறை செய்து வைக்கவில்லையோ, அவருடைய நாவே அவரைச் சிறை செய்து விடும்.
எவன் சந்தேகத்தையும், அச்சத்தையும் வெற்றி கொண்டானோ அவனே தோல்வியையும் வெற்றி கொண்டவனாவான்.
பலர் நாற்காலி கிடைக்கும் வரை தீயைப்போல சுறுசுறுப்பாய் இருக்கிறார்கள். கிடைத்தபிறகோ, அந்த நாற்காலியைப் போல் விறைத்துப் போகிறார்கள்.
Inspirational Quotes in Tamil
விதைத்தவன் உறங்கினாலும் விதை ஒருபோதும் உறங்குவதில்லை.
உங்களால் பறக்கமுடியாவிட்டால் ஓடுங்கள். ஓட முடியாவிட்டால் நடந்து செல்லுங்கள். நடக்கவும் முடியாவிட்டால் தவழுங்கள்.
Inspirational Quotes in Tamil
நீங்கள் உண்மையையே பேசும் போது எதையும் நினைவில் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.
தைரியமாக, தன்னம்பிக்கையுடன் இறுதிவரைப் போரிடுபவர்களுக்கு வாழ்வின் இருளான எல்லாவற்றையும் வெற்றி கொள்வது சாத்தியம்.
என் முயற்சிகள் என்னைப் பல முறை கைவிட்டதுண்டு.! ஆனால் நான் ஒரு முறைகூட என் முயற்ச்சியை கை விட்டதில்லை.
உன்னை மற்ற யாருடனும் ஒப்பிடாதே.. அப்படி செய்வதன் மூலம் நீ உன்னையே இழிவுப் படுத்துகிறாய்.
சிறிய தவறுகளை திருத்தி கொள்ளாவிட்டால் பெரிய தவறுகளைத் தவிர்க்க முடியாது.
எதையாவது ரொம்ப ஆசைப்படும்போது அதை இப்போது வைத்திருப்பவர் சந்தோஷமாகத்தான் இருக்கிறாரா என்று நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள்.
குரலை உயர்த்திப் பேசுவது தலைமைத்துவம் அல்ல. நாம் பேசத்தொடங்கும் போது மற்றவர் குரல்கள் அடங்குவது தான் தலைமைத்துவம்.
இதயம் சொல்வதை செய்.. வெற்றியோ தோல்வியோ.. அதை தாங்கும் சக்தி அதற்கு மட்டும் தான் உண்டு.
பொய் சொல்லி தப்பிக்காதே.. உண்மையை சொல்லி மாட்டிக்கொள்.. பொய் வாழ விடாது..! உண்மை சாக விடாது.
Inspirational Quotes in Tamil
முயற்சி என்பது விதை போல.. அதை விதைத்துக் கொண்டே இரு.. முளைத்தால் மரம்.. இல்லையென்றால் அது மண்ணிற்கு உரம்.
நீங்கள் செய்யும் தவறை உடனே திருத்திக் கொள்ளுங்கள்.. இல்லாவிட்டால், இன்னொரு தவறைச் செய்தவராகி விடுவீர்கள்.
நீ தனிமையில் இருக்கும்போது உனக்கு என்ன மாதிரி சிந்தனைகள் தோன்றுகிறதோ, அதுதான் உன் வாழ்க்கையைத் தீர்மானிக்கும்.
நீ உண்ட உணவும், நீ செய்த தர்மமும் தான் உனக்கு சொந்தம்.
மனிதன் பெண்களைத் தனக்குரிய ஒரு சொத்தாகக் கருதுகிறானேயொழிய தன்னைப் போன்ற உணர்ச்சிகளுக்கும் அருகதையுள்ள உயிர் என்று மதிப்பதில்லை.
பக்தி இல்லாவிட்டால் இழப்பில்லை.. ஒழுக்கம் இல்லாவிட்டால் பாழ்.
நம்முடைய அதிஷ்டங்களுக்கு நாமே காரணம்.. நாமே நம்முடைய துன்பங்களுக்கு காரணம்.. நமது நன்மை தீமைகளை நாமே.
உருவாக்கிக்கொள்கிறோம்.. நாமே நம் கண்களை கைகளால் மறைத்துக் கொண்டு இருட்டாக இருக்கிறது என்று கதறுகிறோம்.
Inspirational Quotes in Tamil
கோபம் என்பது கொடிய அமிலம்.. அது விழும் இடத்தை விட, இருக்கும் இடமே பெரிதும் நாசமாகும்.
ஏமாற்றுவதைக் காட்டிலும் தோற்றுப்போவது மரியாதைக் குரியது.
அடுத்தவர்களின் அந்தரங்கத்தைக்கூட அறிந்து வைத்திருக்கும் நாம், நம்மை பற்றித் தெரிந்திருப்பது என்னவோ வெறும் பூஜ்ஜியம்தான்.
தடம் பார்த்து நடப்பவன் மனிதன்.. தடம் பதித்து நடப்பவன் மாமனிதன்.
விதைக்கும் இடத்தில் நடக்காதே.. நடக்கும் இடத்தில் விதைக்காதே.
நாம் அனைவருக்கும் ஒரே மாதிரி திறமை இல்லாமல் இருக்கலாம். ஆனால் அனைவருக்கும் திறமையை வளர்த்துக்கொள்ள ஒரே மாதிரி வாய்ப்புகள் உள்ளன.
எதிரியை அழிக்க ஒரு சிறந்த வழி.. அவனை நண்பனாக்கி கொள்.
உன் மனம் வலிக்கும் போது சிரி. பிறர் மனம் வலிக்கும் போது சிரிக்க வை.
யோகா என்பது உறுதியாக வாழ்வது பற்றியது.. வெறுமனே காய்கறிகள் சாப்பிடுவதோ, உடலை முறுக்கி வளைப்பதோ, கண்களை மூடி அமர்வதோ அல்ல.
Inspirational Quotes in Tamil
எங்கே வாழ்க்கை தொடங்கும்.. அது எங்கே எவ்விதம் முடியும்.. இதுதான் பாதை, இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது.. பாதையெல்லாம் மாறிவரும்.. பயணம் முடிந்துவிடும்.. மாறுவதை புரிந்து கொண்டால் மயக்கம் தெளிந்துவிடும்.
கவலைப்படுவதால் எந்த ஒரு பிரச்சனையும் தீர்ந்து விடப் போவதில்லை. அதை உற்சாகமாக எதிர்த்து போராடுங்கள்.
நோக்கம் என்னவென்பதை முதலில் தீர்மானி. அதுவே இலக்கு என்பதை உறுதி செய்து கொள். கையில் பணமில்லையே.. உடலில் வலுவில்லையே.. உதவி செய்ய நண்பர்கள் இல்லையே.. என்றெல்லாம் யோசித்து நேரத்தை
வீணாக்காதே. எதற்கும் பயப்படாதே.. தயங்காதே..! இலக்கை நோக்கி அடியெடுத்து வை. தொடர்ந்து முன்னேறு. சோதனைகள் விலகும். பாதை தெளிவாகும். நோக்கத்தை அடைந்தே திருவாய். அதை யாராலும் தடுக்க முடியாது.
Inspirational Quotes in Tamil
வாழ்க்கை என்பது ஒரு சந்தர்ப்பம் – நழுவ விடாதீர்கள். ஒரு கடமை – நிறைவேற்றுங்கள். ஒரு லட்சியம் – சாதியுங்கள். ஒரு சோகம் – தாங்கிக்கொள்ளுங்கள். ஒரு போராட்டம் – வென்றுகாட்டுங்கள். ஒரு பயணம் நடத்தி முடியுங்கள்.
இறக்கத்தான் பிறந்தோம்.. அதுவரை இரக்கத்தோடு இருப்போம்.
ஆனந்தமாய் இருக்கவே எல்லோரும் விரும்புகிறார்கள். ஆனால் மனிதர்கள் மீண்டும் மீண்டும் பள்ளத்தில் விழக் காரணம், ஆனந்தத்தை தக்கவைக்கத் தேவையான சக்தி அவர்களிடத்தில் இல்லை.
ஒரு நல்லப் புத்தகம் நூறு நண்பர்களுக்கு சமம்.. ஆனால், ஒரு நல்ல நண்பன் ஒரு நூலகத்திற்கே சமம்.
பிறர் முதுகுக்கு பின்னால் நாம் செய்ய வேண்டிய வேலை “தட்டிக் கொடுப்பது” மட்டும் தான்.
ஆசைப்படுங்கள்.. வாழ்வின் மிக உயர்ந்தவற்றிற்கு ஆசைப்படுங்கள்.. உங்கள் முழு ஆர்வத்தையும் அத்திசையில் செலுத்துங்கள்.
ஒவ்வொரு அநீதியைக் கண்டும் ஆத்திரத்தில் நீ அதிர்ந்து போவாயேயானால் நீயும் என் தோழனே.
கட்டளையிட விரும்புபவன் முதலில் பணிவதற்குக் கற்றுக் கொள்ள வேண்டும்.
நீ யாரிடம் உன் ரகசியங்களை சொல்கிறாயோ, அவரிடம் உன் சுதந்திரத்தை இழப்பை.
உலகிற்கு அரசனாக இருக்க வேண்டுமானால் முதலில் உன் மனதுக்கு சேவகனாக இருக்கவேண்டும்.
Inspirational Quotes in Tamil
நாம் இன்று இப்படி இருப்பதற்கு நாமே பொறுப்பு.. இனி எப்படி இருக்க வேண்டும் என்று விரும்புகிறோமோ, அப்படி நம்மை செய்து கொள்வதற்கான ஆற்றலும் நம்மிடம் உள்ளது.
உனக்குப் பெருமை வேண்டுமானாலும் உற்சாகம் வேண்டுமானாலும், பிற மனிதனுக்குத் தொண்டு செய்வதில் போட்டி போடுவதன் மூலம் தேடிக்கொள்
வாழும் வாழ்க்கையை நீ உண்மையாக நேசித்தால், நேரத்தை வீண் ஆக்காதீர்.. ஏனெனில், வாழ்க்கை என்பது நேரத்தினால் தான் உருவாக்கப்பட்டிருக்கிறது.
புகழ் என்பது தனிச்சொத்து. அதன் அருமை அதை இழந்த பிறகுதான் தெரிகிறது.
திறமைதான் ஏழையின் மூலதனம்
Inspirational Quotes in Tamil
ஒருவனுக்கு மீனைக் கொடு; அவனுக்கு நீ ஒரு நாள் மட்டுமே உணவளித்தவனாவாய். அவனுக்கு மீன் பிடிக்கக் கற்றுக் கொடு; அவனுக்கு நீ அவனது வாழ்நாள் முழுக்க உணவளித்தவனாவாய்.
நீ பிறரின் குணாதிசயங்களைக் கணிக்கத் துவங்கினால் அவர் பால் அன்பு செலுத்த நேரம் இருக்காது.
காலத்தில் செய்வதை தள்ளிப்போட வேண்டாம். தாமதத்தில் தீய முடிவுகள் ஏற்படும்.
உன் தாய்மொழி மதிக்கப்படவில்லை என்றால், உன் குரல்வளை நெரிக்கப்படுகிறது என்று பொருள்.
சில சமயம் முட்டாளாய் காட்சியளிப்பது அறிவுள்ள செயல்.
அன்பை மட்டுமே கடன் கொடுங்கள்.. அது மட்டுமே அதிக வட்டியுடன் உங்களுக்கு திரும்பக் கிடைக்கும்.
நல்ல முடிவுகள் அனுபவத்திலிருந்து பிறக்கின்றன.. ஆனால் அனுபவமோ தவறான முடிவுகளிலிருந்து கிடைக்கின்றது.
நான் எடுத்த முடிவு சரியா என்று எனக்கு தெரியாது.. ஆனால் எடுத்த முடிவை சரியாக்குவேன்.
Inspirational Quotes in Tamil
தேவைக்கு மேலே பொருளும், திறமைக்கு மேலே புகழும் கிடைத்துவிட்டால் பார்வையில் படுவதெல்லாம் சாதாரணமாகத்தான் தோன்றும்.
நேரத்தை வீணாக்கும் போது கடிகாரத்தின் முள்ளைப் பார்.. ஓடுவது முள் அல்ல.. உன் வாழ்க்கை.
குறை இல்லாதவன் மனிதன் இல்லை.. அதை குறைக்க தெரியாதவன் மனிதனே இல்லை.
அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே.. கோபத்தை வெளிப்படுத்தும் முன் யோசிக்க மறந்து விடாதே
ஆயிரம் ஆண்டு காலம் அடிமையாய் வாழ்வதைவிட, அரை நிமிடமேனும் சுதந்திர மனிதனாக வாழ்ந்து இறப்பது சாலச் சிறந்தது.
ஒருவன் தான் விரும்பும் நலன்கள் அனைத்தையும், மற்றவர்களுக்கும் உண்டாகச்செய்வதுதான் நாகரிகம்
Inspirational Quotes in Tamil
உண்பதற்காக வாழாதே, உயிர் வாழ்வதற்காக உண்.
ஒரு மனிதனின் உண்மையான தன்மையை அறிய வேண்டுமானால், அவனுக்கு அதிகாரத்தை கொடுத்துப் பாருங்கள்.
உங்களிடம் அறிவொளி இருந்தால் அந்தத் தீபத்திலிருந்து மற்றவர்கள் மெழுகுவத்திகளை ஏற்றிக்கொள்ளட்டும்.
தலைமுறை தலைமுறையாகப் பின்பற்றி வரப்படும் பழக்கம் என்பதற்காகவோ, நமது முன்னோர்கள் சொல்லிவைத்து விட்டார்கள்.
என்பதற்காகவோ எந்த ஒரு கருத்தையும் நாம் சிந்தித்துத் தெளிவு பெறாமல் ஏற்றுக்கொள்ளக் கூடாது.
வெற்றி என்பது, லட்சியத்தைப் படிப்படியாகப் புரிந்து கொள்வது.
Inspirational Quotes in Tamil
அன்றாட வாழ்வின் சாதாரன விஷயங்களையும், அசாதாரன முறையில் செய்யும்போது உலகின் கவனத்தை உன் மீது திருப்ப முடியும்.
வெற்றி பெறுவது மிகவும் எளிதானதே. என்ன செய்கிறாய் என்பதை அறிந்து செய். செய்வதை விரும்பிச் செய். செய்வதை நம்பிக்கையோடு செய்.
நான் மெதுவாக நடப்பவன்தான்; ஆனால், ஒருபோதும் பின்வாங்குவதில்லை.
நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை.
நீ நடந்து போக பாதை இல்லையே என்று கவலைபடாதே.. நீ நடந்தால் அதுவே ஒரு பாதை.
பொதுவாக, வெற்றி என்பது, மற்றவர்கள் கைவிட்டுவிட்ட பின்பும் அயராமல் தொடர்வதாலேயே கிட்டுவதாகும்.
கண் பார்வை அற்றவன் குருடன் அல்ல, தன் குற்றங்களை உணராதவனே குருடன்.
Inspirational Quotes in Tamil
இறுதியில் மிஞ்சுவது வருடங்களின் எண்ணிக்கை அல்ல, அதில் வாழ்ந்த வாழ்க்கை மட்டுமே.
கூட்டத்தில் சிரி.. தனித்து அழு.. கூட்டத்தில் அழுதால் நடிப்பு என்பார்கள். தனித்து சிரித்தால் பைத்தியம் என்பார்கள்.
நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.
உன்னால் முடியும் என்று எண்ணுவதையோ அல்லது முடியும் என்று கனவு காண்பதையோ துணிந்து தொடங்கு. உனது துணிவிலேயே அறிவும், ஆற்றலும், மந்திரமும் அடங்கியுள்ளன.
Inspirational Quotes in Tamil
முதலில் தன்னை மாற்றிக்கொள்ளத் தயாராக இருப்பவன் மட்டுமே, உலகை மாற்றத் தகுதி உடையவன்.
தியாகம் தான் வாழ்க்கை, இது இயற்கை கற்றுத் தந்த பாடம்.
தாங்கள் செய்யும் தவறுகளுக்கு, அவரவர்கள் சூட்டிக்கொள்ளும் அருமையான பெயர் தான் அனுபவம்.
கல்வியின் வேர்களோ கசப்பானவை; ஆனால் கனியோ இனிப்பானது.
Inspirational Quotes in Tamil